×

மூடுறியா? இல்லையா? மதுபான கடை மீது சாணம் வீசிய உமா

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், நிவாரி மாவட்டத்தில் ஓர்சா நகரில் மதுபான கடை இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் இங்கு வந்த பாஜ மூத்த தலைவர் உமா பாரதி, கடை மீது சாணத்தை எடுத்து வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உமா பாரதி சாணத்தை எடுப்பதை அருகில் இருக்கும் நபர் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரிடம் உமாபாரதி, ‘நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் கற்களை வீசவில்லை. சாணத்தை தான் வீசுகின்றேன்’ என்று கூறியபடி, மதுபான கடை மீது அதை வீசுகிறார். இது தொடர்பாக அவர் பேட்டியில், ‘‘புனித நகரமான ஓர்ச்சாவில் மதுபான கடையை திறப்பது குற்றம். ஓர்ச்சாவில் இந்த ஆண்டு ராமநவமியின்போது 5 லட்சம் விளக்குள் ஏற்றப்பட்டன. அப்போது, இந்த கடை திறந்திருந்தது. அதனால் தான், புனிதமான மாட்டு தொழுவத்தில் இருந்து சாணத்தை எடுத்து மதுக்கடை மீது தெளித்தேன்,” என்றார். ஆனால், அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் மதுபான கடை செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post மூடுறியா? இல்லையா? மதுபான கடை மீது சாணம் வீசிய உமா appeared first on Dinakaran.

Tags : Uma ,Bhopal ,Orsa ,Niwari district, ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED 4ம் தேதி மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு