சுவாதி நட்சத்திரத்தையொட்டி அலிபிரி யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்

திருமலை: அலிபிரி யோக நரசிம்ம சுவாமிக்கு சுவாதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லக்கூடிய அலிபிரி மலைப்பாதையில் யோக நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாதம்தோறும் வரும் சுவாதி நட்சத்திரத்தின்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடப்பது வழக்கம்.

இந்நிலையில், கார்த்திகை மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் யோக நரசிம்ம சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது.  இதில், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜீ உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: