×

இனிப்பு பால் மட்ரி

என்னென்ன தேவை?

மைதா  2 கப், ரவை  1/2 கப், எள்  1/4 கப், நெய்  1/4 கப் + 1 டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை  1/2  3/4 கப், சமையல் சோடா  1/2 சிட்டிகை, உப்பு  1  சிட்டிகை, பொரிக்க எண்ணெய்  தேவைக்கு, தேவையானால் தெளிக்க பால்  1/2 கப்.

எப்படிச் செய்வது?

மைதா, ரவை, சோடா உப்பு, உப்பு போட்டு நன்றாக கலந்து 1/4 கப் நெய்யை சிறிது சூடாக்கி சேர்த்து கலக்கவும். சர்க்கரை, எள் போட்டு பால் தெளித்து  கெட்டியாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1520 நிமிடம் மூடி வைக்கவும். இப்போது மூடி வைத்த மாவில் 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் பிசைந்து  எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து உள்ளங்கைக்கு மத்தியில் வைத்து 1/2 இன்ச் கனத்திற்கு அழுத்திக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி மிதமான  தீயில் வைத்து 5 மட்ரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து பரிமாறவும்.

குறிப்பு:

மைதாவிற்கு பதில் கோதுமை மாவு சேர்க்கலாம்.

Tags :
× RELATED சுந்தர வேடம்