×

பரோட்டாவுக்கு ஊற்றிய சிக்கன் குழம்பில் இறந்து போன பல்லி: 4 பேருக்கு வாந்தி, மயக்கம்

ஈரோடு: ஈரோடு,அரச்சலூர் ஓடாநிலையை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). மாற்றுத்திறனாளி. இவர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக அவரது மனைவி அமுதா (40), உறவினர்களான சந்திரன் (48), சண்முகம் (32) ஆகியோர் சுரேஷ் (32) என்பவருக்கு சொந்தமான காரில் வந்தனர்.பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, ஈரோடு காந்திஜி ரோட்டில் காளை மாட்டு சிலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் மதிய சாப்பாடு சாப்பிட முடிவெடுத்தனர்.மாற்றுத்திறனாளியான செந்தில்குமார் மட்டும் ஓட்டலுக்குள் சாப்பிட செல்லாமல் காரில் அமர்ந்திருந்தார். அமுதா, சந்திரன், சண்முகம், டிரைவர் சுரேஷ் ஆகியோர் ஓட்டலுக்குள் சென்று பரோட்டா சாப்பிட்டனர்.அதற்காக ஓட்டல் ஊழியர் ஊற்றிய குழம்பில் இறந்து போன பல்லி கிடந்தது. இதைப்பார்த்ததும் சாப்பிட்டுக்கொண்டிருந்த அமுதா, சந்திரன் ஆகியோர் தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கினர். இதையடுத்து அமுதா, சந்திரன், டிரைவர் சுரேஷ், சண்முகம் ஆகிய 4 பேரையும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஈரோடு தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர். …

The post பரோட்டாவுக்கு ஊற்றிய சிக்கன் குழம்பில் இறந்து போன பல்லி: 4 பேருக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Lizard ,Erode ,Senthilkumar ,Arachalur airport ,
× RELATED முகப்பேர் பகுதியில் பல்லி கிடந்த...