×

பூதப்பாண்டி அருகே இன்று காலை பரபரப்பு; 1000 வாழைகளை சேதப்படுத்தி யானை கூட்டம் அட்டகாசம்: அச்சத்துடன் வாழும் பொதுமக்கள்

பூதப்பாண்டி: பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தியில் தோப்புக்குள் புகுந்த யானை கூட்டம் சுமார் 1000 வாழைகளை சேதப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் கூட்டமாக உலாவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பூதப்பாண்டி. இந்த ஊரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. இந்தநிலையில் வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது.இந்தநிலையில் பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் ஊரின் மலையடி வாரத்தில் சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் வாழை விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை தோட்டத்திற்கு வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது பாதிக்கும் மேற்பட்ட வாழைகளை யானைகளால் சேதப்படுத்தப் பட்டிருந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். 1000க்கும் மேற்பட்ட வாழைகளை துவம்சம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து ஊர்மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் தோப்பிற்குள் சிறிது தூரம் நடந்து சென்ற பார்க்கையில் தூரத்தில் யானைகள் பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் அவ்வழியாக சென்று பார்த்தபோது தூரத்தில் 4, 5 யானைகள் கூட்டமாக உலாவியடி நின்றது.  இதனால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் பூதப்பாண்டி வன அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஊருக்குள் யானைகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.கடந்த வருடமும் விவசாயி ராஜாவின் ேதாட்டத்திற்குள் யானைகள் புகுந்து ஏராளமான வாழைகளை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதற்கான நிவாரணம் இன்னும் கிடைக்காத நிலையில் தற்போதும் யானைகள் 1000 வாழைகளை சேதப்படுத்தியுள்ளது விவசாயியை கவலையடைய செய்துள்ளது.ஆண்டுதோறும் தொடரும் சேட்டை: ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம், திடல், காட்டுப்புதூர், கடுக்கரை தெள்ளாந்தி, சீதப்பால் ஆகிய பகுதிகளில் மலையில் இருந்து கீழே இறங்கும் யானை கூட்டங்கள் சுமார் 10 நாட்கள் அங்கேயே சுற்றி திரிகின்றன. பின்னர் வாழை உள்ளிட்ட விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதற்கு வனத்துறை உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பூதப்பாண்டி அருகே இன்று காலை பரபரப்பு; 1000 வாழைகளை சேதப்படுத்தி யானை கூட்டம் அட்டகாசம்: அச்சத்துடன் வாழும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Bustle ,Bhuthapandi ,Bhootapandi ,Telandi ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு