×

கோவையிலிருந்து ஷீரடிக்கு தனியார் ரயில் சேவை; எதிர்ப்புக்கு இடையே துவங்கியது

கோவை: கோவையிலிருந்து ஷீரடி சாயிபாபா கோயிலுக்கு சிறப்பு ரயில் சேவை நேற்று துவங்கியது. ஒன்றிய அரசின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் நேற்று மாலை இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. வடகோவை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தினர், பொதுமக்கள் மலர் தூவி ரயிலை வழியனுப்பினர். துவக்க விழாவில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் சீனிவாஸ், நடிகர் சேரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவில் முதல் முறையாக இந்த சிறப்பு ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர், மந்திராலயம் வழியாக இந்த ரயில் ஷீரடிக்கு வரும் வியாழக்கிழமை சென்றடையும். ரயிலில்  16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. 1,100 பேர் பயணம் செய்ய ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. ஷீரடி சாயிபாபா கோயிலுக்கு ரயில் சேவை துவக்கப்பட்டது  பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் 3 முறை இந்த  ரயில் கோவையில் இருந்து ஷீரடிக்கு இயக்கப்படவுள்ளது. ஷீரடி பயணத்திற்காக ரயிலின் உள் கட்டமைப்பு, வடிவமைப்புகள் மாற்றப்பட்டிருந்தது. பயணிகளுக்கு உணவு, குடிநீர், செல்போன் சார்ஜர், படுக்கை, பெட்சீட் வசதி செய்து தரப்பட்டிருந்தது.  ரயில் 1458 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படுகிறது. புனே வரை இந்த ரயில் செல்லும். பின்னர் இணைப்பு ரயில் மூலமாக பயணிகள் ஷீரடி செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டணம் ஸ்லீப்பர் பிரிவிற்கு ரூ.2,500 ரூபாய், பேக்கேஜ் கட்டணம் ரூ.5,000, மூன்றடுக்கு ஏசிக்கு ரூ.5,000, பேக்கேஜ் கட்டணம் ரூ.7,999, இரண்டடுக்கு ஏசி வகுப்பு கட்டணம் ரூ.7,000, பேக்கேஜ் கட்டணம் ரூ.10,000, ஏசி முதல் வகுப்பு கட்டணம் ரூ,10,000, பேக்கேஜ் கட்டணம் ரூ.12,999. பேக்கேஜ் கட்டணத்தில் ஷீரடி சென்று திரும்பி வரலாம். அங்கே சிறப்பு தரிசனம், 3 பேர் தங்க ஏசி அறை, பயண இன்சூரன்ஸ் போன்ற வசதிகள் உண்டு. இந்த தனியார் ரயில் சேவைக்கு பல்வேறு தரப்பினர், ரயில்வே ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு காட்டி போராட்டம் நடத்தி வந்தனர். ரயில்வே கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. தனியார் வசம் கூடுதல் கட்டணத்திற்காக இந்த சேவை வழங்கப்பட்டது சரியல்ல என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பையும் மீறி தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, ரயில் நிலைய வளாகத்தில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்….

The post கோவையிலிருந்து ஷீரடிக்கு தனியார் ரயில் சேவை; எதிர்ப்புக்கு இடையே துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Shirdi ,Saibaba ,Temple ,Union Government ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...