×

உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி

சென்னை: தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி ராமய்யா கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘பித்தல மாத்தி’. மாணிக்க வித்யா எழுதி இயக்கியுள்ளார். சம்ஸ்கிருதி, பாலசரவணன், வினுதா லால், தம்பி ராமய்யா, தேவதர்ஷினி, வித்யுலேகா ராமன், ‘ஆடுகளம்’ நரேன், ‘காதல்’ சுகுமார் நடித்துள்ள இப்படத்துக்கு எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, மோசஸ் இசை அமைத்துள்ளார்.

விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இதை சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.சரவணன் தயாரித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பித்தல மாத்தி என்றால் கேடித்தனம் மற்றும் தகிடுதத்தம் செய்பவர்களைக் குறிக்கும். ஒருவர் தனது வாழ்க்கையில் நல்லது எது, கெட்டது என்று எப்படி தெரிந்துகொண்டு முன்னேறுகிறார் என்பது கதை. இம்மாதம் தமிழ் மற்றும் தெலுங்கில் படம் திரைக்கு கொண்டு வரப்படுகிறது’ என்றார்.

 

The post உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Umapati Ramaiah ,Chennai ,Umapathi Ramaiah ,Thambi Ramaiah ,Manika Vidya ,Samskriti ,Balasaravanan ,Vinuta Lal ,Devadarshini ,Vidyulekha Raman ,Adukalam' Naren ,Kathal' Sukumar ,Pithala Maathi ,Kollywood News ,Kollywood ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!