×

சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் : இன்று மாலை மகாதீபம்

திருப்பரங்குன்றம்: ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று பட்டாபிஷேக விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நேற்று மாலை  நடைபெற்றது. அப்போது சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுப்பிரமணியசுவாமிக்கு வைர கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு தாமிர கொப்பரை தாயார் நிலையில் உள்ளது.
திருவண்ணாமலையிலிருந்து வரும் நிபுணர் குழுவினர் மலையில் தீபம் ஏற்றும் பணிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த தீபம் தொடர்ந்து மூன்று நாட்கள் எரியும். இன்று நடைபெறும் மகா தீபத் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஆறு உதவி ஆணையர்கள் தலைமையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 150 எஸ்ஐக்கள் உள்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags : Pattabhishekam ,Subramanya Swamy ,Mahadipam ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு