×

முல்லைபெரியாற்றில் நீர்வரத்து குறைந்ததால் உறை கிணறுகளில் நீர்சுரப்பில் பாதிப்பு

தேனி: தேனி-  பழனிசெட்டிபட்டி அருகே முல்லை பெரியாற்றில் அரண்மனை புதூர், கொடுவிலார்பட்டி, தாடிசேரி, தப்புகுண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரமாக உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாற்றில்  வரும் தண்ணீரை உறைகிணறுகளில் ஊற்றெடுத்து அந்தத் தண்ணீரை குழாய்  மூலமாக கிராமங்களுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்யப்படுகிறது.தேனி அருகே அரண்மனை புதூர் ஊராட்சியில்  பள்ளபட்டி, கோட்டைப்பட்டி,  வீருசின்னம்மாள்புரம், அய்யனார்புரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அரண்மனை புதூர் ஊராட்சியில் மொத்தம் சுமார் 22 ஆயிரத்து 500 பேர் குடியிருந்து வருகின்றனர். ஊராட்சிக்கு தேவையான குடிநீர் பழனிசெட்டிபட்டிக்கும் சத்திரப்பட்டிக்கும் இடையே ஓடும் முல்லைப் பெரியாற்று கரையில்  3 உறை கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பைப் லைன் மூலமாக அரண்மனை புதூர் ஊராட்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் உறைகிணறுகள் அமைந்துள்ள பகுதி மேடாகி உறை கிணறுகளில் நீர் சுரக்காமல் உள்ளது. இதனால் அரண்மனை புதூர் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவர் பிச்சையிடம் கேட்டபோது, முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் இது போல வறண்டது கிடையாது. தற்போது உறை கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளில் நீர்வரத்து குறைந்ததால் மணல்மேடுகளாக ஆறு மாறிப் போயுள்ளது. இதனால் உறைகளிலும் ஊற்று குறைந்துள்ளது. உறை கிணறுகளில் சுரக்கக்கூடிய குறைவான தண்ணீரை கொண்டு குடிநீர் வினியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குடிநீர் தேவைக்காக தண்ணீரை தொடர்ந்து திறந்துவிட்டால் உறை கிணறுகளுக்கு தண்ணீர் ஊற்று கிடைக்கும். தண்ணீர் திறந்துவிட கலெக்டரிடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்….

The post முல்லைபெரியாற்றில் நீர்வரத்து குறைந்ததால் உறை கிணறுகளில் நீர்சுரப்பில் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mullaiberiya ,Theni ,Mullai Periyar ,Theni- Palanisettipatti ,Palat Pudur ,Koduvilarpatti ,Thadissery ,Tappukundu ,Kandamanur ,Mullaiperiyar ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்