×

கண்ணகி நகரில் கற்களை வீசி மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு

துரைப்பாக்கம்: கண்ணகி நகரில் நேற்றிரவு ஒரு மாநகர பேருந்தின் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்கியது. இதில் அதன் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை பாரிமுனையில் இருந்து நேற்றிரவு 9 மணியளவில் ஒரு மாநகர பேருந்து வந்தது. இப்பேருந்தை டிரைவர் கண்ணபிரான் ஓட்டி வந்துள்ளார். பின்னர் பயணிகளை இறக்கிவிட்டு, கண்ணகி நகர் பேருந்து நிலையத்துக்குள் பஸ் சென்றது.  அங்கு குடிபோதையில் சுற்றி திரிந்த ஒரு மர்ம கும்பல், திடீரென மாநகர பேருந்தை வழிமறித்தது. பின்னர் அப்பேருந்தின்மீது சரமாரி கற்களை வீசி தாக்கியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதை பார்த்ததும் டிரைவர் கண்ணபிரான் கீழே இறங்கி, அந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனை பிடிக்க முயற்சித்துள்ளார். இதில் ஆத்திரமான மர்ம கும்பல், டிரைவர் கண்ணபிரானை கத்திமுனையில் மிரட்டிவிட்டு தப்பி சென்றது. இப்புகாரின்பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post கண்ணகி நகரில் கற்களை வீசி மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kanagi ,Ganagi ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?