×

கோவை அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை கூட்டம்: தனியாக பிரிந்த குட்டி யானை தாக்கி ஒருவர் காயம்

கோவை: கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் கிராமத்தில் வனத்தில் இருந்து வெளியேறிய 6 யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தன. அவை தோட்டம், வீட்டுக்குள் புகுந்து நாசம் செய்தன. 5 யானைகள் மட்டும் வனத்திற்குள் வனத்துறையினரால் விரட்டப்பட்டன. குட்டி யானை வழி தவறி வேளாங்கண்ணி நகருக்குள் அங்கும் இங்கும் ஓடியது. குட்டி யானை தாக்கியதில் வேட்டைத்தடுப்பு காவலர் நாகராஜிக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், தொடர்ந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானையை பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி கரடிமடை பீட் சுள்ளல்பொறுக்கி என்ற இடத்தில் வனத்திற்குள் விரட்டினர். அங்கு குட்டி யானை தனது கூட்டத்தில் சேர்ந்தது. …

The post கோவை அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை கூட்டம்: தனியாக பிரிந்த குட்டி யானை தாக்கி ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dithipalayam ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...