×

தாளாளர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விவகாரம் நர்சிங் கல்லூரி மூடப்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்: விருதுநகர் கலெக்டரிடம் மாணவிகள் வலியுறுத்தல்

விருதுநகர்: தாளாளர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தால் அருப்புக்கோட்டை தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங்  கல்லூரி மூடப்பட்டது. படிப்பை தொடர மாற்று ஏற்பாடு செய்து  தரக்கோரி மாணவ, மாணவியர் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் கோரிக்கை வைத்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பழைய பஸ் நிலையம் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ்(41). விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜ சிறுபான்மை பிரிவு முன்னாள்  தலைவர். இவர், தனது கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 8 பிரிவுகளில் வழக்கு பதிந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். இவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க  திருவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தாஸ்வின் ஜான் கிரேஸ் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைதை தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் 200க்கும் மேற்பட்டோர் நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்களை கூட்டரங்கில் அமர வைத்த கலெக்டர் மேகநாத ரெட்டி, கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் கல்லூரி மூடப்பட்டுள்ளதால் மாற்றுக்கல்லூரிகளில் சேர்த்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தாங்கள் பயிலும் பாடப்பிரிவுகள், தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் விபரம், கட்டணம் செலுத்திய விபரம், மாற்றுக்கல்லூரிக்கு ஏற்பாடு செய்யும் வரை விடுதி செயல்பட வேண்டும். கல்லூரியில் தங்களது சான்றிதழ்கள் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பினர். பின்னர் கலெக்டர் மேகநாதரெட்டி பேசுகையில், ‘‘ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் சென்னை, காரைக்குடியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களை தொடர்பு கொள்ள வேண்டும். 10 முதல் 15 நாட்களுக்குள் உறுதியான ஏற்பாடுகள் செய்யப்படும். அதுவரை விடுதிகள் செயல்படவும், உணவு தருவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மற்றும் தாளாளர் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கல்லூரியில் இருந்து எந்த பொருட்கள், ஆவணங்களும் வெளியேற விடாதபடி சீலிட்டு கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார். பின்னர் கலெக்டர் மேகநாத ரெட்டி, மாணவர்களுக்கு ஆறுதல் கூறி, மாற்று ஏற்பாடுகளை விரைவில் செய்து தருவதாக கூறி அனுப்பி வைத்தார்….

The post தாளாளர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விவகாரம் நர்சிங் கல்லூரி மூடப்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்: விருதுநகர் கலெக்டரிடம் மாணவிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nursing College ,Thiruthnagar Sex Torcher ,Virudhnagar ,Virudhunagar ,Arupukotta Private Nursing and Catering College ,Torcher ,Virudunagar ,Dinakaran ,
× RELATED சீனிவாசன் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் சாதனை