×

காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக காஞ்சிபுரத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், தனியார் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும், பொதுமக்களுக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம், சங்கரா கலைக்கல்லூரி, திருமலை பொறியியல் கல்லூரி, அன்னை தொழிற் கல்லூரி மாணவிகள் என கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் நேற்று துவக்கி வைத்தார்.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் கலந்துகொண்டார். பேரணி பூக்கடை சத்திரம், கிழக்கு ராஜவீதி, அன்னை இந்திரா காந்தி சாலை, காமராஜர் சாலை வழியாக தாலுகா அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. வழியெங்கிலும் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. …

The post காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Child Labour Abolition Awareness Rally ,Kangipuram ,Kanchipuram ,Collector ,Arti ,Child Labour Abolition Awareness Rally in ,Kancheepuram ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...