ஐதராபாத்: ஜெயம் ராஜா இயக்கத்தில் மீண்டும் சிரஞ்சீவி நடிக்கும் படம் உருவாக உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தை தெலுங்கில் ‘காட்பாதர்’ பெயரில் ஜெயம் ராஜா இயக்கினார். இதில் மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடித்திருந்தார். கெஸ்ட் ரோலில் சல்மான் கான் நடித்தார். இப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை ஜெயம் ரவி நடிப்பில் இயக்கும் வேலைகளில் ராஜா ஈடுபட்டிருந்தார்.
இப்படத்தின் திரைக்கதை பணிகள் நடந்து வந்தன. ஆனால் எதிர்பார்த்தது போல் திரைக்கதை பணிகள் முழுமை அடையாததால் அதற்குள் மற்றொரு படத்தை இயக்க ராஜா ஆயத்தமானார். இந்நிலையில் ‘காட்பாதர்’ வெற்றிக்கு பிறகு அதே கூட்டணி மற்றொரு படத்தில் இணைய முடிவு செய்தனர். அதன்படி சிரஞ்சீவிக்காக சொல்லப்பட்ட கதையை படமாக்க ராஜா முடிவு செய்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்கும் எனத் தெரிகிறது.
The post ராஜா இயக்கத்தில் மீண்டும் சிரஞ்சீவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.