ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மீண்டும் இணைந்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் செகண்ட் சிங்கிளான ‘சூடானா…’ என்ற பாடலுக்கான புரமோ வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிளான ‘புஷ்பா… புஷ்பா’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில், 2வது சிங்கிளான ‘சூடானா…’ பற்றிய அறிவிப்பு, ராஷ்மிகா மந்தனா இருக்கும் புரமோவுடன் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாக மாறும் சுவாரஸ்யமான காட்சிகள் கொண்ட புரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘புஷ்பா 1’ படத்தில் புஷ்பா, ஸ்ரீவள்ளி கேரக்டர்களுக்கு இடையிலான காதல் பாடலாக ‘சாமி… சாமி’ ஹிட்டானது. அதுபோன்ற காதல் பாடலாக ‘சூடானா…’ இருக்கும் என்று புரமோ உணர்த்துகிறது. சந்திரபோஸ் எழுதிய இப்பாடலை தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது.
The post புஷ்பா 2 இரண்டாவது பாடல் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.