×

2 வீரர்கள் மாயம்: 2வது வாரமாக தேடும் பணி

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் மாயமான 2 ராணுவ வீரர்கள் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அம்ரீந்தர் சிங் வாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாயக் பிரகாஷ் சிங்  மற்றும் லான்ஸ் நாயக் ஹரேந்தர் சிங் ஆகிய 2 ராணுவ வீரர்கள், கடந்த  மே 28ம் தேதி தற்செயலாக ஆற்றில் விழுந்ததாகக் கருதப்படுகிறது. டிரோன்கள், மோப்ப நாய்கள் மூலமாக அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இருப்பினும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் தேடுதல் பணி கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது….

The post 2 வீரர்கள் மாயம்: 2வது வாரமாக தேடும் பணி appeared first on Dinakaran.

Tags : ITANAGAR ,ARUNACHAL PRADESH ,
× RELATED அருணாச்சலில் ஜூன் 2 காலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை