×

அத்திமாஞ்சேரி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பள்ளிப்பட்டு, ஜூன் 13: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி தலைமையில்  மாணவர் சேர்க்கை பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. பள்ளி வளாகத்திலிருந்து துவங்கிய பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ஜெயபிரகாஷ் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று கிராம வீதிகளில் பேரணியாக சென்று அரசு பள்ளியில்  கல்வித்தரம், ஆசிரியர்கள், வசதி, குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் உதவி ஆசிரியர்கள் மாதவன், முனியம்மா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

The post அத்திமாஞ்சேரி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Atthimanchery Govt. ,Pallipattu ,Tamil Nadu ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே லவா ஆற்றில் ராட்சத...