×

முத்துப்பேட்டை அருகே சாலைவளைவில் தடுப்புச்சுவர் உடைந்ததால் தொடர் வாகன விபத்துகள்-நெடுஞ்சாலைதுறை சரி செய்ய கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை சங்கேந்தி கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலை வளைவில் வாய்க்கால் தடுப்புசுவர் உடைந்ததால் வாகன விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலை வளைவில் இருந்த வாய்க்கால் தடுப்புசுவர் சில ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்தின்போது வாகனம் மோதி உடைந்து விழுந்தது. பின்னர் அதில் நெடுஞ்சாலைதுறையினர் பெயரளவில் ஒரு சுவரை கட்டிச் சென்றனர். அதுவும் அடுத்த மாதத்தில் உடைந்து காணாமல் போனது. பின்னர் மீண்டும் கட்டுவதும், காணாமல் போவதும் இங்கு வாடிக்கையாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலைதுறை நிரந்தரமாக இந்த தடுப்பு சுவர் கட்ட முயற்சி மேற்க்கொள்ளவில்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் வாகனங்கள் தடுப்புசுவர் இல்லாததால் நிலைதடுமாறி அருகேயுள்ள வாய்க்காலில் விழுந்து விபத்துகுள்ளாகும் நிலை இருந்து வருகிறது. அதேபோல் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்கள் வரும்போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்பொழுது வரை இப்பகுதியில் சிறு சிறு விபத்துக்கள் மட்டுமே நடந்து வருகிறது. பெரியளவில் விபத்துக்கள் ஏற்படும் மன் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நெடுஞ்சாலைதுறை உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து நிரந்தரமாக தரமான தடுப்புச்சுவரை கட்டி இப்பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post முத்துப்பேட்டை அருகே சாலைவளைவில் தடுப்புச்சுவர் உடைந்ததால் தொடர் வாகன விபத்துகள்-நெடுஞ்சாலைதுறை சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Muthupet ,Muthupettai Sanghendi Kadatheru ,East Coast ,Muthupetta ,Dinakaran ,
× RELATED நிழற்குடையில் ஆதரவற்ற நிலையில்...