×

ரசிகர்கள் வராததால் தெலங்கானாவில் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மூடல்

ஐதராபாத்: தெலுங்கு படவுலகம் தற்போது மிகப்பெரிய நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், சமீபத்தில் வெளியான எந்த தெலுங்கு படமும் மிகப்பெரிய ஹிட்டாகி வசூலில் சாதனை படைக்கவில்லை. கடந்த சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு முன்னணி நடிகர்களின் படங்களோ அல்லது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கக்கூடிய படங்களோ திரைக்கு வரவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர், மக்களவை தேர்தல், தனியார் ஓடிடி தளங்களின் அதிவேக வளர்ச்சி போன்ற காரணங்களால் தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், ரசிகர்களை ஈர்க்கக்கூடிய அழுத்தமான கதை கொண்ட படங்கள் வெளியாகாத நிலையில், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஓரளவு வணிகரீதியாக இயங்கினாலும், சிங்கிள் ஸ்கிரீன் கொண்ட தியேட்டர்கள் அதிக நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக இன்று முதல் 26ம் தேதி வரை 10 நாட்கள் சிங்கிள் ஸ்கிரீன் கொண்ட தியேட்டர்களை மூட தெலங்கானா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 27ம் தேதி பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்த ‘கல்கி 2898 ஏடி’ என்ற பான் இந்தியா படம் திரைக்கு வருகிறது.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்த ‘புஷ்பா 2’ என்ற பான் இந்தியா படம் திரைக்கு வருகிறது. இவ்விரு படங்களும் தெலுங்கு படவுலகினர் மத்தியில் மட்டுமின்றி, பல்வேறு மொழிப் படவுலகினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போது தெலங்கானாவில் இயங்கி வரும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் புத்துயிர் பெறும் என்று நம்புகின்றனர்.

The post ரசிகர்கள் வராததால் தெலங்கானாவில் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மூடல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Telangana ,Hyderabad ,Sankranti festival ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற...