- சென்னை
- சந்திரனின் படங்கள்
- அமீர்
- சாந்தினி ஸ்ரீதரன்
- ஆனந்தராஜ்
- இமான் அனாச்சி
- ராஜ் கபூர்
- சரவண சக்தி
- சுப்பிரமணிய சிவன்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: மூன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதம் பாவா இயக்கத்தில் அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், சரவண சக்தி, சுப்பிரமணிய சிவா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் உயிர் தமிழுக்கு.
கேபிள் டிவி நடத்தி வரும் எம்ஜிஆர் பாண்டியன்( அமீர்). வெளிநாட்டிலிருந்து திரும்பும் தமிழ்ச்செல்வியைக்( சாந்தினி ஶ்ரீதரன்) கண்டவுடன் காதல். ஆனால் தமிழ்ச்செல்வி அப்பகுதியின் மாவட்ட செயலாளரின் மகள் என்பதால் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டி அரசியலில் ஈடுபடுகிறார் பாண்டியன். இந்தத் தருணத்தில் தமிழ்ச்செல்வியின் தந்தையை மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். கொலைப்பழி பாண்டியன் மீது விழுகிறது, சிறையில் அடைக்கப்படுகிறார். இதனால் தமிழ் செல்விக்கு பாண்டியன் மீது உண்டாகும் கோபம் , அரசியல் வெறுப்பாகவும் மாறுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் தேர்தலில் எதிர்த்து நிற்கிறார்கள் முடிவு என்ன என்பது மீதிக்கதை.
கொஞ்சம் பழைய கண்டதும் காதல் கதை தான். ஆனால் இந்தக் கதையில் காதலுக்கு எதிரியாக அரசியல் இருப்பது சற்றே புதுமையாக சில காட்சிகளும் சுவாரசியமாக அமைத்திருக்கிறார் ஆதம் பாவா. இதுவரையிலும் இல்லாத புது வகையில் கமர்சியல் நாயகனாகவும் அதிலும் அரசியல்வாதியாகவும் அமீர் அட்ராசிட்டி செய்திருக்கிறார்.
மேலும் அரசியல் பிரச்சார காட்சிகளில் அவர் சுத்த தமிழில் பேசும் வசனங்கள் கவனம் பெறுகின்றன. எனினும் வடசென்னை 2 படம் வெளியான பிறகு இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் இந்த கதை சசிகுமார், சந்தானம், விமல் உள்ளிட்டோர் நடிக்க வேண்டிய டெம்ப்ளேட்டில் இருப்பதால் பல இடங்களில் அமீர் ஒட்ட மறுக்கிறார்.
நாயகி சாந்தினி ஸ்ரீதரன், முதல் பாதியில் வேறு ஒரு தோற்றத்திலும் மூன்று வருடங்கள் கொரோனா ஊரடங்கு முடிந்து மீண்டும் படப்பிடிப்பு நிறைவு செய்ததால் இரண்டாம் பாகத்தில் சற்று உடல் பருமனாகி வேறு ஒரு தோற்றத்திலும் காட்சியளிக்கிறார். எனினும் முதல் பாதியில் காதல் காட்சிகளுக்கு ஒல்லியான தோற்றமும், இரண்டாம் பாதியில் நிகழும் தேர்தல் யுத்தத்திற்கு பிரச்சார காட்சிகளுக்கும் அவருடைய பருமனான தோற்றம் பொருந்துகிறது. நடிப்பிலும் அமீருக்கு நிகராக மாஸ் செய்திருக்கிறார்.
தேவராஜ் ஒளிப்பதிவில் தேர்தல் களக் காட்சிகள் சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசாகரின் இசை மீண்டும் நம்மை 90களின் காலகட்டத்திற்கு இழுத்துச் செல்கிறது. தேர்தல் காட்சிகளில் நடக்கும் சில சம்பவங்கள் லாஜிக் மீதான கேள்வியை எழுப்புகிறது.
அமீரை நல்லவராக காட்டுவதற்கே வரும் திடீர் வில்லன்கள், ஹீரோ என்றால் எந்த நிமிடத்திலும் என்ன வேண்டுமானாலும் நிகழும் என்கிற தெலுங்கு சினிமா பாணி பில்டப் காட்சிகள் என பல காட்சிகள் சினிமா தனமாக தெரிகின்றன. மொத்தத்தில் எந்த எதிர்பார்ப்பும் அல்லாமல் ஒரு படம் என்பவர்களுக்கு சுவாரசியமான படமாக இருக்கும் இந்த உயிர் தமிழுக்கு.
The post உயிர் தமிழுக்கு திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.