×

பகுதி நேர ஆசிரியர்கள் படிப்படியாக நிரந்தரம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகத்தில் திட்டமிட்டபடி 1ம் வகுப்பு முதல் வரும் 13ம்தேதி(நாளை) பள்ளிக்கூடம் திறக்கப்படும். அதற்காக பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பள்ளி வாகனங்களை தணிக்கைக்கு உட்படுத்துவது குறித்து ஏற்கனவே விரிவான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பெற்றோரிடம் எந்த தொகையும் வசூலிக்க கூடாது. அப்படி வசூலிப்பதாக புகார் வந்தால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் பள்ளி செயல்படும் நேரத்தை மாற்றுவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது குறித்து முதல்வர் சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார். 5 ஆண்டு காலத்தில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்….

The post பகுதி நேர ஆசிரியர்கள் படிப்படியாக நிரந்தரம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Dear Mahesh ,Kumbakonam ,Private Engineering College ,Tarasuram ,Magesh ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...