×

வேலூர் மாவட்ட எல்லை பகுதியில் அமிர்தி அருவியில் மூழ்கி வாலிபர் பலி: நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது விபரீதம்

போளூர்: அமிர்தி அருவியில் நண்பர்களுடன் சென்று செல்பி எடுக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியானார். ஜவ்வாதுமலை வேலூர் மாவட்ட எல்லை பகுதியில் அமிர்தி சிறுவன உயிரியியல் பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்கா பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகள் ஜமுனாமரத்துர் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அமிர்தி வன உயிரியியல் பூங்கா அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அமிர்தி அருவி உள்ளது. இந்நிலையில் வேலூர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த முஜர்சிங் (21), கிஷோர்(19), விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அபிஷேக்(19), ஆதிஷ்(17), சூர்யா(18) ஆகிய நெருங்கிய நண்பர்களான 5 பேரும் நேற்று மாலை அமிர்திக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் பைக்கை நிறுத்தி விட்டு அருவிக்கு யாருக்கும் தெரியாமல் காட்டுபகுதிக்கு நடந்து சென்றனர். அங்கு 5 நண்பர்களும் உற்சாகத்துடன் குளியல் போட்டனர். பின்னர் அந்த உற்சாக துள்ளளுடன் நண்பர்கள் 5 பேரும் அருவி மேல் நின்று செல்பி எடுத்துள்ளனர். அப்போது திடீரென கால் வழுக்கி முஜர்சிங்  தண்ணீரில் மூழ்கினார்.  அப்போது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் புதைசேற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு வேறு வழியில்லாமல் நண்பர்கள் 4 பேரும் அமிர்தி வனச்சரக அலுவலகத்திற்கு வந்து கதறி அழுது நடந்ததை சொல்லி உள்ளனர். வனச்சரக அலுவலர் முருகன், வனவர் ரவீந்தரன் மற்றும் வன ஊழியர்கள் விரைந்து சென்று தண்ணீரில் குதித்து முஜர்சிங் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஜமுனாமரத்துர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போளூர் டிஎஸ்பி குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் முஜர்சிங் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜமுனாமரத்துர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வேலூர் மாவட்ட எல்லை பகுதியில் அமிர்தி அருவியில் மூழ்கி வாலிபர் பலி: நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Amriti Falls ,Vellore district ,Javvadumalai Vellore district ,Amriti ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் மீட்பு