×

ஜிம்பாப்வேயில் 130% பணவீக்கம்: மக்கள் திண்டாட்டம்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் பணவீக்கம் 130 சதவீதம் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வினால், அத்தியாவசிய உணவு பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதியுறுகின்றனர்.தென் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் மத்திய வங்கி பென்ச்மார்க் வட்டி விகிதத்தை கடந்த மாதம் ஒரு டாலருக்கு 276 ஆக அறிவித்தது. இதனால் அந்நாட்டின் நாணயத்தின் மதிப்பு வேகமாகச் சரிந்து பணவீக்கம் 100 சதவீதத்தைத் கடந்தது.உக்ரைன் போருக்கு முன்பு 66 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 131.7% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், அங்கு விலை வாசி 21% அதிகரித்துள்ளது. இதேபோல் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்தாண்டை விட 150% கூடுதலாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் பிரெட் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வங்கிகளுக்குக் கடன் வழங்குவதை ஜிம்பாப்வே அரசு தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்த 2 நாட்களில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.`உக்ரைன் போரின் தாக்கத்தினால், பொருளாதாரத்தில் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் ஜிம்பாப்வே, அந்நிய செலாவணி விகித மாற்றம், விலைவாசி உயர்வினால் ஏற்பட்டுள்ள உறுதியற்ற பொருளாதார நிலைத் தன்மை ஆகிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,’ என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் துலி க்யூப் கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது….

The post ஜிம்பாப்வேயில் 130% பணவீக்கம்: மக்கள் திண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Zimbabwe ,Harare ,
× RELATED ஜிம்பாப்வேயின் புதிய நாணயம் பெயர் ஜிக்