×

வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 3 பேர் கைது

பூந்தமல்லி: வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் (27), மதுரவாயல் பகுதியில் தங்கி, வானகரத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில்  நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், வினோத்தை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், பணம் எதுவும் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த மூவரும், வினோத்தை கத்தியால் வெட்டிவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதேபோல், மதுரவாயலை சேர்ந்த ஆதித்யா (25), மதுரவாயல் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், மதுரவாயல் வழக்குப்பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில், 2 சம்பவத்திலும் ஈடுபட்டது பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ராஜா (28), ரஞ்சித்குமார் (28), குமரேசன் (30) ஆகியோர் என தெரியவந்தது. நேற்று அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு செல்போன், பைக், கத்தியை பறிமுதல் செய்தனர்….

The post வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Vinod ,Ramanathapuram, Maduravyal ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய...