×

சந்திரகிரி கோதண்டராமர் கோயிலில் கொடிமரத்துக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

திருமலை: சந்திரகிரி கோதண்டராமர் கோயிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இன்று யாக பூர்ணாஹுதியுடன் நிறைவு பெறுகிறது. திருப்பதி அடுத்த சந்திரகிரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்  கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது.  இங்கு ஆண்டு முழுவதும் நடைபெறும் பூஜைகளில் அர்ச்சகர்கள் மூலமாகவோ, பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அல்லது கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாக பவித்ர உற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி பவித்ர உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை 6 மணி முதல் 7 மணிக்கு இடையே சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.  

பின்னர் சீதா, லட்சுமண சமேத கோதண்டராமர் உற்சவர்கள் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு ஆராதனை மற்றும் மண்டல பூஜை நடத்தப்பட்டது. காலை 9 மணி முதல் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்ர மாலைகள்  மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு மூலவருக்கும், நரசிம்மசுவாமி, கோதாதேவி, 12 ஆழ்வார்கள், வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேய சுவாமி, பக்த ஆஞ்சநேயர், சேனாதிபதி, கருடாழ்வார், யாக சாலையில் உள்ள யாக குண்டங்கள், பலிபீடம், கொடிமரம் மற்றும் விமான கோபுரத்திற்கு பவித்ர மாலைகளை அர்ச்சகர்கள் பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க சமர்ப்பித்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் துணை செயலாளர் சுப்பிரமணியம், கோயில் ஆய்வாளர் கிருஷ்ண சைதன்யா உட்பட அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர். பவித்ர உற்சவம் இன்று யாக பூர்ணாஹுதியுடன் நிறைவு பெறுகிறது.

Tags : malls ,Pavithra ,Chandragiri Kothandaramar ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்