×

பேரணாம்பட்டு அருகே சாராய ஊறலை குடித்து தள்ளாடியபடி வனத்துறை அலுவலகத்தில் புகுந்த யானை: ஊழியர்கள் ஓட்டம்

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே நேற்று அதிகாலை சாராய ஊறலை குடித்த யானை போதையில் வனச்சரக அலுவலகத்திற்குள் புகுந்தது. இதைப்பார்த்ததும் ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரவட்லா, சாத்கர் மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது குடியிருப்புகள், விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி விடுகிறது. நிலத்தில் யானைகள் புகுந்துவிடுவதால் ஏராளமான விவசாய பயிர்கள் சேதமாகி வருகிறது. இந்நிலையில் அரவட்லா மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, கடந்த சில நாட்களாக அரவட்லா மற்றும் சாத்கர் மலையையொட்டி சுற்றி வருகிறது. அதேபோல் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை சாத்கர் மலைப்பகுதிக்கு சென்றது. அங்கு சாராய வியாபாரிகள், காய்ச்சுவதற்கு தயாராக பேரலில் சாராய ஊறலை வைத்திருந்தனர். இந்த பேரலை தள்ளிய யானை, சாராய ஊறலை குடித்தது. அதன்பிறகு பங்களாமேடு பகுதிக்கு தள்ளாடியபடி சென்றது. அப்போது திடீரென அங்குள்ள வனச்சரக அலுவலகத்திற்குள் புகுந்தது. அப்போது யானையை பார்த்ததும் அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓடினர். ஆனால் அலுவலகத்திற்குள் புகுந்த யானை அங்கு எதுவும் செய்யாமல் மீண்டும் வெளியே வந்தது. அங்கு வனத்துறையினர் வைத்திருந்த நாவல், தேக்கு, இருளிமரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டசெடிகளை மிதித்து சேதப்படுத்தியது. இதற்கிடையில் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தனர். பட்டாசு சத்தம் கேட்ட யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள்ள சென்றுவிட்டது. இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post பேரணாம்பட்டு அருகே சாராய ஊறலை குடித்து தள்ளாடியபடி வனத்துறை அலுவலகத்தில் புகுந்த யானை: ஊழியர்கள் ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : peranambattu ,Forest Department ,Peranambatu ,Forest ,Panampanampatu ,
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...