×

நன்நடத்தை விதி மீறிய ரவுடிக்கு 348 நாள் சிறை

சென்னை: பெரம்பூர் எஸ்.எஸ்.வி.கோயில் முதல் தெருவை சேர்ந்தவர் அப்பு (எ) அமர்நாத் (21). இவர்மீது செம்பியம், திருவிக நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், கடந்த மே மாதம் 16ம் தேதி புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனை சந்தித்து, இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன், என்று உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், அதை மீறி மே மாதம் 24ம் தேதி பெரம்பூரை சேர்ந்த ஜாகீர் என்பவரின் கடையில் தகராறு செய்து அங்கிருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து கொலை மிரட்டல்  விடுத்துள்ளார். இது சம்பந்தமாக செம்பியம் போலீசார் அப்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடத்தை விதிமீறி குற்றச் செயலில் ஈடுபட்ட இவர் மீது நடவடிக்கை எடுக்க ேகாரி, செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் புளியந்தோப்பு துணை கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், அப்புவை 348 நாட்கள் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி சிறையில் அடைக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார்.ஆலந்தூர்: நங்கநல்லுார் பி.வி.நகர் 12வது தெருவை சேர்ந்த வசந்தகுமார் (38), சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், கடந்த மே 30ம் தேதி பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் முன்னிலையில் ஆஜரா்கி, இனிமேல் குற்றச் செயலில் ஈடுபட மாட்டேன், என பிரமாண பத்திரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு, அதைமீறி கடந்த 2ம் தேதி கஞ்சா விற்ற வழக்கில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நடத்தை விதிமீறி குற்றச்செயலில் ஈடுபட்டதால், வசந்தகுமாரை 263 நாட்கள் ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்….

The post நன்நடத்தை விதி மீறிய ரவுடிக்கு 348 நாள் சிறை appeared first on Dinakaran.

Tags : Rowdy ,CHENNAI ,Appu ,Amarnath ,Perambur SSV ,Sembayam ,Thiruvik Nagar ,
× RELATED மனைவியின் தாய்மாமன் கத்தியால் குத்திக்கொலை: ரவுடி சரண்