×

திருவானைக்காவல் கோயிலில் டிசம்பர் மாதம் கும்பாபிஷேகம்

திருச்சி: திருவானைக்காவல் கோயிலில் வருகிற டிசம்பரில் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோயில் பஞ்சபூ தலங்களில் நீர் ஸ்தலமாகும். கடந்த 12.7.2000ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 18 வருடங்கள் ஆன நிலையில் கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. இதையடுத்து பக்தர்களால் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.5 கோடி வரை திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 96 பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூ.3.50 கோடி தமிழகத்தில் பல் வேறு நகரங்களில் இருந்தும் பக்தர்களிடம் நிதியுதவி பெறப்பட்டு  திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.

மேலும் எலக்ட்ரிக்கல் வேலைக்கும் பக்தர்களிடம் இருந்து ரூ.72.58லட்சம் நிதியுதவி பெற்று அதற்கான வேலைகளும் நடந்து முடிந்தது. இதையடுத்து பரிவார தேவதைகளுக்கு முதல்கட்டமாக வருகிற டிசம்பர் 9ம் தேதியும், 2ம் கட்டமாக சுவாமி, அம்மனுக்கு 12ம் தேதியும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மகா கும்பாபிஷேகத்தையொட்டி நேற்றுமுன்தினம் மாலை வெளிநடராஜர் சன்னதியில் முதல் கால பாலாலய யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 6.30 மணிக்கு 2ம் கால பாலாலய யாக பூஜைகள் நடை பெற்றன.

Tags : Thiruvanaikaval ,
× RELATED போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண...