×

ரஷ்யாவால் அசையும் அமெரிக்கப் பொருளாதாரம்!: 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த பணவீக்கம் விகிதம்.. அமெரிக்கர்கள் கலக்கம்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு கடந்த மே மாதம் அந்த நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு விலை மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வால் இந்த பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. பணவீக்க விகிதம் ஏப்ரலில் அதிகரித்து மே மாதத்தில் 8.3 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால் அதையும் தாண்டி 8.6 சதவீதமாக பணவீக்க விகிதம் பதிவாகி இருப்பது ஒட்டுமொத்த மக்களையும் கலக்கத்திற்கு ஆட்படுத்தியுள்ளது. அமெரிக்கா முழுவதும் ஒரு காலன் (Gallon) சமையல் எரிவாயு விலை 6 டாலர் உயர்ந்துள்ளது. இதனால் ஜூன் மாதமும் நுகர்வோர் விலை குறியீட்டெண் அதிகரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்துவோம் என்று அதிபர் பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது என்று பைடன் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த மாதம் வீட்டு வாடகை, விடுதி கட்டணம், விமான கட்டணம் உயர்த்தப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகள் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழிற்சந்தையில் ஏற்பட்ட சம்பள உயர்வு, பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே அடுத்த வரம் புதன்கிழமை ரெப்போ வட்டி விகிதம் மேலும் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. …

The post ரஷ்யாவால் அசையும் அமெரிக்கப் பொருளாதாரம்!: 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த பணவீக்கம் விகிதம்.. அமெரிக்கர்கள் கலக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : US ,Russia ,Americans ,Washington ,United States ,
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட...