×

கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்

மொடக்குறிச்சி :  பாசூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் நெல்களை சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15 ஆயிரத்து 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மஞ்சள், கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. காலிங்கராயன் பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் மாதம் தண்ணீர் நிறுத்தப்படும். இந்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது இந்தாண்டு ஏப்ரல் மாதம் தண்ணீர் நிறுத்தப்பட்டதையடுத்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் நெல் பயிரிட்டனர். தற்போது நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் காலிங்கராயன் பாசன பகுதியான பாசூர், சோளங்காபாளையம் பகுதிகளில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காலிங்கராயன் பாசன விவசாயிகள் நேற்று ஈரோடு  கரூர் ரோட்டில் சோளங்காபாளையம் நால்ரோட்டில் டிராக்டரில் நெல்லை கொண்டு வந்து சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துங்கள் என கூறினர். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்….

The post கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Modakkurichi ,Basur ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...