×

வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் பந்தக்கால் நிகழ்ச்சி

திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று பந்தல்கால் நிகழ்ச்சி நடந்தது. டிச. 18ல் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் டிசம்பர் 7ம் தேதி தொடங்குகிறது. 8ம் தேதி பகல்பத்து விழா தொடங்கி 17ம் தேதி மோகினி அலங் காரமும், 18ம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

வரும் 24ம் தேதி திருக்கைத்தல சேவை, 25ல் திருமங்கை மன்னன் வேடுபறி, 27ல் தீர்த்தவாரி, 28ல் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று காலை 10.20 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன்பு திருக் கொட்டகை பந்தக்கால் எனப்படும் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் இணை ஆணையர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Srirangam temple ,Vaikuntha Ekadasi ,
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...