×

கந்தர்வகோட்டை பகுதியில் மஞ்சள் நிற பூ பூத்த கடலை செடிகள்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் தற்சமயம் விவசாயிகள் விதைந்த நிலக்கடலை விதைகள் நன்கு வளர்ந்து பூக்கும் நிலையில் உள்ளது. கடலை செடிகளின் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து இருக்கும் காட்சியை வைத்து கடலையின் மகசூல் திறனை கண்டு கொள்ளலாம் என விவசாயிகள் கூறுகிறார்கள். அதன் அடிப்படையில் பார்க்கும்போது நடப்பு பட்டத்தில் கடலை நன்கு விளைந்து விவசாயிகளுக்கு நல்ல மகசூல் பலன் தரும் படி இருக்கும் என கூறுகிறார்கள். விவசாயிகளிடமிருந்து எண்ணெய் வித்துக்கள் ஆன கடலை ,எள், தேங்காய் ஆகியவற்றை தமிழக அரசு கொள்முதல் செய்து எண்ணெயாக பிழிந்து நியாயவிலைக் கடைகளில் மக்களிடம் விற்பனை செய்யலாம் என்று கூறுகிறார்கள். இவ்வாறு செய்தால் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணையின் அளவு குறைத்துக் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி ஆன எண்ணையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கிறார்கள்….

The post கந்தர்வகோட்டை பகுதியில் மஞ்சள் நிற பூ பூத்த கடலை செடிகள் appeared first on Dinakaran.

Tags : Kandarvakotta ,Gandarvakotta ,Gandarvakotta District ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே மோகனூரில் இல்லம்...