சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், இந்தி யில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராகப் பணியாற்றிய அனல் அரசு, தற்போது ‘இந்தியன் 2’, ‘வா வாத்தியாரே’, இந்தியில் ‘பேபி ஜான்’, ‘வார் 2’ ஆகிய படங்களில் பணியாற்றுகிறார். மேலும், விஜய் சேதுபதி மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ள ‘பீனிக்ஸ்’ (வீழான்) படத்தை தயாரித்து இயக்குனராக அறிமுகமாகிறார். தமிழ்நாடு அரசு விருது உள்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ள அவர், இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, நயன்தாரா நடித்து, அனிருத் இசை அமைத்து திரைக்கு வந்திருந்த ‘ஜவான்’ படத்துக்கான சில சண்டைக் காட்சிகளை அமைத்திருந்தார்.
இந்நிலையில், திரைப்பட சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது போன்ற ஒரு விருதான ‘டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது’ போட்டி பட்டியலில் ‘ஜான்விக் சாஃப்டர் 4’, ‘மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங்’, ‘எக்ஸ்ட்ராக்ஷன் 2’, ‘பேல்லரினா’ ஆகிய படங்களுடன் ‘ஜவான்’ படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்துக்குப் புறப்பட்ட அனல் அரசு அளித்த பேட்டியில், ‘நான் பணியாற்றிய ‘ஜவான்’ படம், சர்வதேச அளவில் ஹாலிவுட் படங்களுடன் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஷாருக்கான், வருண் தவான், ஷாகித் கபூர், அட்லீ உள்பட பலர் வாழ்த்தினர். வரும் 11ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் விழாவில் எனக்கு விருது கிடைக்குமா என்ற நல்ல விஷயம் தெரியும்’ என்றார்.
The post ஜவான் சண்டைக்கு சர்வதேச அங்கீகாரம்: அனல் அரசு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.