×

புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகை: மீண்டும் நடிக்க தொடங்கினார்

மும்பை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மஹிமா சவுத்ரி, அந்த நோயில் இருந்து மீண்டதால் அவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். பாலிவுட் நடிகை மஹிமா சவுத்ரி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றை நடிகர் அனுபம் கெர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மஹிமா சவுத்ரியை  ‘தி சிக்னேச்சர்’ படத்தில் நடிப்பதற்காக அழைத்தேன். ஆனால், ​​அவருக்கு  மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இந்த நோயில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள மஹிமா சவுத்ரி, உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். அவர் புற்றுநோய்  பாதிப்பில் இருந்து மீண்டதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.  அதற்கு பதிலளிக்கும் வகையில் மஹிமா சவுத்ரி கூறுகையில், ‘எனக்கு போன் கால் வந்தபோது நான் சிகிச்சையில் இருந்தேன். என்னுடன் செவிலியர்கள் இருந்தனர். அவர்  என்னை ‘தி சிக்னேச்சர்’ படத்தில் நடிக்கச் சொன்னார். நானும் அந்தப்  படத்தில் நடிக்க விரும்பினேன். ஆனால் கொஞ்சம் நாள் காத்திருக்க வேண்டும்  என்று சொன்னேன். ஆனால் தற்போது ‘தி சிக்னேச்சர்’ படத்தில் நடித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த சினிமா ஷூட்டிங்கில், நடிகர் அனுபம் கெருடன் மஹிமா சவுத்ரி நடித்து வருகிறார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகை மஹிமா சவுத்ரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்….

The post புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகை: மீண்டும் நடிக்க தொடங்கினார் appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Mahima Chaudhary ,Bollywood… ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு