×

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் தாமத கட்டணம் சிறு வணிகர்களுக்கு ரத்து: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் உள்ளனர். இதில், 6.53 லட்சம் பேரும், மாநில வரம்புக்கும், 4.35 லட்சம் வரி செலுத்துவோர் மத்திய வரி வரம்புக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், ரூ.1.50 கோடிக்கு கீழ் காலாண்டிற்கு ஒரு முறை ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்தால் போதும். அவ்வாறு கணக்குகளை தாக்கல் செய்யாதவர்களிடம் இருந்து தாமத கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி சட்டத்தின்படி, ஜிஎஸ்டிஆர்-4 படிவம் தாமதமாக தாக்கல் செய்வதற்கு ஒவ்வொரு நாளுக்கும் ரூ.50 என்ற வீதம்  தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் அவர்கள் ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதத்தால் அபராத கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து, சிறு வரி செலுத்துவோர்க்கு 2021-2022ம் நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன் செலுத்துவதற்கான தாமத கட்டணத்தை மே 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்திலும் ஜிஎஸ்டிஆர் படிவத்தை தாக்கல் செய்வதற்கான கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசின் வணிகவரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2021-22 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டிஆர்-4 படிவத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் செலுத்த வேண்டிய தாமதக் கட்டணம்.மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 47, மே 1, 2022 முதல் ஜூன் 30, 2022 வரையிலான காலத்திற்கு தள்ளுபடி செய்யப்படும். இந்த அறிவிப்பு மே 26, 2022 முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்….

The post ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் தாமத கட்டணம் சிறு வணிகர்களுக்கு ரத்து: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக்...