×

குலசேகரன்பட்டினம் கோயில் ஜப்பசி திருக்கல்யாண திருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயில் ஜப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 5.30மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம் பெருமாளுக்கு 16வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு மகாதீபாராதனை நடந்தது. மாலை 6மணிக்கு அப்பர் அடிகள் உழவாரப்பணி திருவீதி உலா, 7மணிக்கு  ரிஷப வாகனத்தில ஸ்ரீபலிநாதர் திருவீதி உலா, இரவு 8.30மணிக்கு அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் திருவீதியுலா நடந்தது.

விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வந்து  அருள்பாலிக்கிறார். நவ.1ம் தேதி காலை 7.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் வைபவமும், நவ.2ம் தேதி இரவு7 மணிக்கு திருக்கல்யாணக்காப்பு கட்டுதல் நடக்கிறது. நவ.4ம் தேதி அதிகாலை 4மணி முதல் 5மணிக்குள் அறம் வளர்த்த நாயகிக்கு திருமாங்கல்ய தாரணம் திருமங்கல திருநாண் பூட்டுதல் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை சுப்பிரமணியசுவாமி கோயில் தக்கார் கண்ணன்ஆதித்தன், இணைஆணையர் பாரதி, கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Kulasekarapatnam Temple Japakse The Thirukalayana ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...