×

முதல்வர் பினராய் மீது தங்கம் கடத்தல் குற்றச்சாட்டு சொப்னா மீது போலீஸ் வழக்கு: தலைமை செயலகத்தை காங். முற்றுகை

திருவனந்தபுரம்: தங்க கடத்தலில் முதல்வர் பினராய் விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சொப்னா மற்றும் மாஜி எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கேரள அரசியலில் கடந்த இரு வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு இப்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயன் சூட்கேசில் துபாய்க்கு கட்டுக்கட்டாக பணத்தை கடத்தினார், அவரது வீட்டிலிருந்து பெரிய, பெரிய பிரியாணி பாத்திரங்களில் தங்கம் உள்பட பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது,  இதில் முதல்வரின் வரது மனைவி கமலா, மகள் வீணா, ஐஏஎஸ் அதிகாரிகளான சிவசங்கர், நளினி நெட்டோ, பினராய் விஜயனின் உதவியாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தங்க கடத்தல் முக்கிய குற்றவாளியான சொப்னா கூறியது கேரள அரசியலை உலுக்கிய உள்ளது.   இதனால், முதல்வர் பினராய்விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் கேரளா முழுவதும் பிரியாணி  பாத்திரங்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல பகுதிகளில் பினராய் விஜயனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் இளைஞர் காங்கிரசார் பிரியாணி பாத்திரங்களுடன் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் விரட்டினர். ஆனாலும், கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில்  பலர் காயமடைந்தனர். கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்பட பல  இடங்களில் பிரியாணி சமைத்து போராட்டம் நடத்தப்பட்டது. கொல்லம், கோழிக்கோடு  உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் போலீசுக்கும்,  போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஏராளமானோர்  காயமடைந்தனர். இதற்கிடையே, கேரள முதல்வர் பினராய்  விஜயனுக்காகத்தான் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டது. 21 தவணையாக  சுமார் 600 கிலோவுக்கு மேல் தங்கம் கொண்டுவரப்பட்டது. 22வது முறை  கடத்தப்பட்ட போது தான் விமானநிலையத்தில் அந்த பார்சல் பிடிபட்டது. இதற்கான ஆதாரம் உள்ளது உள்ளது என்று  கேரள முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான பி.சி ஜார்ஜ் கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் மீது புகார் கூறிய சொப்னா மற்றும் முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் மீது மாஜி அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஜலீல் அளித்த புகாரின்பேரில் இருவர் மீதும் 120 பி,  153 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘மீண்டும் மீண்டும் சொல்வேன்’ கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக பதியப்பட்ட வழக்கில், சொப்னா  முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல்  செய்தார். அதில், ‘என் உயிருக்கு போலீசால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக அலுவலகத்துடன்  சேர்ந்து பல்வேறு தேச விரோத செயல்கள் நடைபெற்றன.  இதில் முதல்வர் பினராய்  விஜயன், அவரது குடும்பத்தினர், ஐஏஎஸ் அதிகாரிகளான சிவசங்கர், நளினி நெட்டோ,  முன்னாள் அமைச்சர் ஜலீல், முதல்வர் பினராய் விஜயனின் உதவியாளர்  ரவீந்திரனுக்கும் தொடர்பு உண்டு. இந்த விவரங்களை மத்திய விசாரணை  அதிகாரிகளிடம் கூறக் கூடாது என்று என்னையும், சரித்குமாரையும் மிரட்டினர்.  தற்போது என் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜாமீன்  கிடைக்கக்கூடிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் முன்ஜாமீன்  வழங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது….

The post முதல்வர் பினராய் மீது தங்கம் கடத்தல் குற்றச்சாட்டு சொப்னா மீது போலீஸ் வழக்கு: தலைமை செயலகத்தை காங். முற்றுகை appeared first on Dinakaran.

Tags : CM ,Binarai ,Sobna ,Chief Secretariat ,Thiruvananthapuram ,Maji ,MLA ,Chief President ,Binarai Vijayan ,CM Binarai ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு