×

21வது சட்டத்திருத்தம் நெருக்கடி பசில் ராஜபக்சே திடீர் ராஜினாமா

கொழும்பு: 21வது சட்டத்திருத்தம் அமல்படுத்த நெருக்கடி முற்றி வரும் நிலையில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள இலங்கை முன்னாள் நிதியமைச்சரும் மகிந்த, கோத்தபய ராஜபக்சேக்களின் சகோதரருமான பசில் ராஜபக்சே தனது எம்பி. பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இலங்கையில் ஏற்பட்ட கடும் நிதி, பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி பொறுப்பில் இருந்து விலக வலியுறுத்தி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக  மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரர்  பசில் ராஜபக்சே தனது நிதியமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் 4ம் தேதியும், மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ஏப்ரல் 9ம் தேதியும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், தனது தனது எம்பி. பதவியை பசில் ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வழங்கினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `எனது எம்பி. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளேன். எம்.பி. பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். இனிவரும் காலங்களில் எந்த அரசு பதவியையும் வகிக்கப் போவதில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக முழு நேர பங்களிப்பை ஆற்றுவேன். இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியில் இருந்து வேறொரு தகுதியானவர் நியமிக்கப்படுவார்,’ என தெரிவித்துள்ளார். இவருக்கு பிறகு, அப்பதவியில் தொழிலதிபர் டம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  அதே நேரம், 21 சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கை, அமெரிக்கா என இரட்டை குடியுரிமை பெற்றுள்ள பசில் ராஜபக்சே பதவி இழக்கக் கூடும் என்பதால் முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை பசில் மறுத்துள்ளார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது டிவிட்டரில், “இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், சீனா ஆகியவற்றின் தூதரக அதிகாரிகளை இன்று காலை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உதவும்படி கேட்டுக் கொண்டேன். அவர்களும் உதவுவதாக உறுதி அளித்தனர்,’’ என்று கூறியுள்ளார்….

The post 21வது சட்டத்திருத்தம் நெருக்கடி பசில் ராஜபக்சே திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Basil ,Colombo ,Sri Lanka ,finance minister ,Mahinda ,Amendment ,Basil Rajapaksa ,Dinakaran ,
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்