×

செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலி மாமல்லபுரதை அழகுபடுத்த ரூ 10 கோடி

மாமல்லபுரம்: செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலியாக ரூ10 கோடி மதிப்பில் மாமல்லபுரத்தை அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், முக்கிய பிரமுகர்களை கவரும் வகையில் ரூ10 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில், 200 நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த, போட்டிக்காக தமிழக அரசு ரூ92 கோடி  நிதியை ஏற்கனவே ஒதுக்கி உள்ளது. இதேப்போல், போட்டி துவக்க விழா மற்றும் நிறைவு விழாவிற்காக ரூ8 கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடதக்கது. இந்நிலையில், மாமல்லபுரத்தை அழகுபடுத்தவும், பல்வேறு முன்னேற்பாடு வசதிகளை மேற்கொள்ள, மேலும் கூடுதலாக ரூ10 கோடி நிதியை கடந்த வாரம் விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிதியில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் பழுதுபார்த்தல், இசிஆர் நுழைவு பகுதியிலிருந்து கோவளம் சாலையில் நடைபாதை அமைத்தல், புதிதாக மின் விளக்குகள் பொருத்துதல், சோழி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைத்தல், நவீன கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டியுடன் கூடிய குடிநீர் சுத்திரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் வெளிநாட்டினர் பார்த்து பிரமிக்கும் வகையில் அழகுபடுத்த மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது….

The post செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலி மாமல்லபுரதை அழகுபடுத்த ரூ 10 கோடி appeared first on Dinakaran.

Tags : Mamallapura ,Chess Olympiad ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்