×

மணலி, ஜல்லடியன்பேட்டை பகுதி மக்கள் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பகுதி-2, மணலி பகுதிக்குட்பட்ட இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர் பகுதிகள் மற்றும் பகுதி-14, பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியன்பேட்டை பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, மணலி பகுதிக்குட்பட்ட இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம் மாத்தூர் பகுதிகள் மற்றும் பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியன்பேட்டை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு  https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து உரிய கட்டணங்களை செலுத்தி புதிய குடிநீர் இணைப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.  மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு பகுதி பொறியாளர்-2 (மணலி) 8144930902, துணை பகுதி பொறியாளர்-4,    8144930204, துணை பகுதி பொறியாளர்-5, 8144930205, பகுதி பொறியாளர்-14 (பெருங்குடி) 8144930914, உதவி பொறியாளர்-89, 8939855191, துணை பகுதி பொறியாளர்-43, 8144930243 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post மணலி, ஜல்லடியன்பேட்டை பகுதி மக்கள் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Manali, Jalladianpet ,Chennai ,Chennai Drinking Water Board ,Area ,Manali ,
× RELATED ஜூன் 2 வரை சென்னை, தாம்பரம்...