×

2 ரவுடிகளுக்கு குண்டாஸ்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 19ம் தேதி பட்டாத்தியுடன் தங்கியிருந்த ஆவடி அருகே திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஜோசப் (எ) தேவகுமார் (35), திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியை சேர்ந்த மோகன்பிரபு (23), மப்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த டில்லிபாபு (27), புது இருளஞ்சேரி பகுதியை சேர்ந்த அவினாசி (19), நயப்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோரை மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் இவர்கள் இந்த 5 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இதில், நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (30), திருநின்றவூரை சேர்ந்த ஜோசப் (எ) தேவகுமார் (35) ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி பகேர்லா செபாஸ் கல்யாண் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவின்படி, மணிகண்டன், தேவகுமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். …

The post 2 ரவுடிகளுக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Kundas ,Thiruvallur ,Gruvallanagar ,Padatti ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டாஸில் கைது..!!