×

குஜராத் பேசன் லட்டு

என்னென்ன தேவை?

கடலை மாவு - 2 கப், நெய் - 1/2 கப், பொடித்த சர்க்கரை - 1¼ கப் - 1½ கப், உடைத்த முந்திரி - 1/4 கப், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, அலங்கரிக்க உடைத்து வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுத்தெடுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் மீதியுள்ள நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து கடலை மாவை சேர்த்து கைவிடாமல் 15 நிமிடம் வரை கறுகாமல் வறுக்கவும். அதனுடன் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். பின்பு அதனுடன் உப்பு போட்டு கலந்து சிறிது ஆறியதும் சர்க்கரைத்தூள் சேர்த்து லட்டு பிடிக்கவும். மேலே முந்திரி, திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும்.  குறிப்பு: கலவை சிறிது சூடாக இருந்தால்தான் லட்டு பிடிக்க வரும்.

Tags : Gujarat Pathankot ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி