×

திருப்போரூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்றக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரிமளா யுவராஜ் முன்னிலை வகித்தார். திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ19 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா தட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் தண்டலம் ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். …

The post திருப்போரூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Foundation ,Panchayat ,Thandalam Panchayat ,Tiruporur Union ,Tiruporur ,Thandalam ,Tiruporur Union Thandalam Panchayat ,Panchayat Building Foundation ,Laying ,
× RELATED ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைப்பதை எதிர்த்து வழக்கு..!!