×

சங்கரன்கோவில் அருகே வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் உடப்பன்குளம் சாலை ஜக்கம்மாள் கோயில் அருகே ஸ்ரீ மஹாமந்திர வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா விமரிசையாக நடந்தது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 8ம் தேதி அமாவாசை சிறப்பு பூஜையுடன் துவங்கியது. விழா நாட்களில் விநாயகர், உன்மத்த பைரவர் மற்றும் வராகி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக தீபராதனை நடந்தது.  12ம் நாளையொட்டி காலை சிறப்பு யாகமும், தொடர்ந்து விநாயகர், உன்மத்த பைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.

இதையடுத்து மஹாமந்திர வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கும்ப அபிஷேகம், கோ பூஜை நடந்தது. பூஜைகளை துர்கா பிரத்யங்க்ரா உபாஸகர் சக்திகணேஷ் குழுவினர் நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.  விழாவில் வக்கீல் சண்முகையா, நம்பி, கணேசன் மற்றும் சங்கரன்கோவில், களப்பாகுளம், உடப்பன்குளம், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மஹாமந்திர வராகி அம்மன் வழிபாட்டு குழுவை சேர்ந்த சக்திவேல், பரமகணேசன், முருகன், ஜெயராமன் மற்றும் செந்தில்ஆண்டவர் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

Tags : festival ,Navarathri ,temple ,Varagi Amman ,Sankarankoil ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...