×

பகளாமுகி தேவி கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்

கடையம்:  தெற்கு பாப்பான்குளம்  சூர்யமங்களம் பகளாமுகி தேவி கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள ராஜகாளியம்மன் சன்னதியில் நவராத்திரி விழாவையொட்டி தினமும் பள்ளி உணர்த்தல், நிர்மல்யா தரிசனம், உஷா பூஜை, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக அலஙாகார தீபாராதனை நடந்தது. பின்னர் பாயாச பலி, உச்சிக்கால பூஜை, குருதி தர்ப்பணம் நடந்தது. மாலை சந்தியா பூஜை, மஹா தீபாராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை, அதள பூஜை நடந்தது. 17ம் தேதி முதல் 19 வரை பஞ்ச வாத்தியங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. 18 தேதி புஷ்பாபிஷேகம் நடந்தது.   

மறுநாள் காலை பால்குட ஊர்வலம், கோ பூஜை, நண்பகலில் திக் பலி நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் நாளை மறுதினம் (24ம்தேதி) காலை 9 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளதாக கோயில் தலைமை அறங்காவலரும்  பிரபல கேரள ஜோதிடருமான சூரியன் நம்பூதிரி தெரிவித்தார். ஏற்பாடுகளை ஸ்ரீசூர்ய மங்கலம் அத்வைத வேத வித்யா பீடத்தினர் செய்திருந்தனர்.

Tags : Navarathri Festival ,Balakumudi Devi ,
× RELATED நவராத்திரி விழா பெரியபாளையத்தம்மன் அலங்காரத்தில் வழிபாடு