×

சீனாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்த போர் விமானம்: ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்..!!

ஜியாங்யாங்: சீனாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹூபே மாகாணத்தில் லவ் ஹி ஹோ நகரில் சீன விமானப்படை போர் விமானங்கள் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தன. அப்போது போர் விமானங்களில் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி பாராஷுட் மூலம் குதித்து உயிர் தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஜியாங்யாங் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து தீ பிடித்து எரிந்தது. தகவல் மூலம் விரைந்து சென்ற ஜியாங்யாங் நகர தீயணைப்புத் துறையினர், பலமணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த விபத்தில் குடியிருப்பு வாசி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து சீன ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

The post சீனாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்த போர் விமானம்: ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : China ,Hubei Province ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன