×

ஆறுமுகநேரியில் தேனீக்கள் தொல்லையால் அவதிப்படும் பனையேறும் தொழிலாளர்கள்-பதநீர் இறக்குவதில் சிக்கல்

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி – அடைக்கலாபுரம் சாலையில், இருபுறமும் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. இங்கு தற்போது பதநீர் சீசன் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பனையேறும் தொழிலாளர்கள் விடிலி அமைத்து பனைத்தொழில் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பனையில் இருந்து பதநீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக தேனீக்கள் படையெடுப்பு அதிகளவில் உள்ளது. இந்த தேனீக்கள் ஒரு பனை மரத்தில் 1.30 லிட்டர் முதல் 2.30 லிட்டர் வரை உள்ள பதநீரை குடித்துவிடுகிறது. மேலும் சில நேரங்களில் பதநீரில் அதிகளவில் தேனீக்கள் விழுந்து இறந்து விடுகிறது. இதனால் பதநீர் கெட்டுவிடுகிறது. இதன் காரணமாக பனையேறும் தொழிலாளர்கள் பதநீரை எடுக்க பயன்படுத்தும் கலசத்தை சுற்றிலும் சாக்கு மற்றும் துணிகளை கொண்டு மூடிவைத்து வருகின்றனர். ஆனாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பனை தொழிலாளர்கள் பதநீரை இறக்க செல்லும்போது மரத்தின் மீது சுமார் 200க்கும் மேற்பட்ட தேனீக்கள் சுற்றி கொண்டு தொழிலாளர்களை கொட்டுகின்றன.இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது பதநீர் சீசனை பயன்படுத்தி வெளிமாநிலத்தில் இருந்து பனை மரம் அடர்ந்து காணப்படும் இடங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் தேன் வளர்ப்பு தொழில் நடக்கிறது. இதனால் தான் இப்பகுதியில் அதிகளவில் தேனீக்கள் சுற்றிவருவதாக பனையேறும் தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதநீர் சீசன் முடியும் வரை தேன் வளர்ப்பு கூடுகளை அப்புறப்படுத்த வேண்டுமென இப்பகுதி பனையேறும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

The post ஆறுமுகநேரியில் தேனீக்கள் தொல்லையால் அவதிப்படும் பனையேறும் தொழிலாளர்கள்-பதநீர் இறக்குவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Arumukuneri ,Alakkalapuram Road ,Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!