×

பேரணாம்பட்டில் பரபரப்பு அதிகாலையில் விவசாய நிலத்தில் புகுந்து காட்டுயானை அட்டகாசம்-மக்கள் பீதி

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு பகுதியில் அதிகாலையில் விவசாய நிலங்களில் காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் யானை கிராமத்தில் புகுந்துவிடுமோ என்று மக்கள் பீதியில் உள்ளனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் பத்தலப்பல்லி, மசிகம், கெம்பசமுத்திரம், தேன்கல்சரகம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அருகிலுள்ள வனப்பகுதிகளில் இருந்து யானைகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.இந்நிலையில், பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்த அப்துல்பாஷித் என்பவரது விவசாய நிலத்தில் 3 நெல் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்தார். மேலும் அதேபகுதியை சேர்ந்த சங்கராச்சாரி என்பவர் தனது விவசாய நிலத்தில் வாழை மரங்களை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை அருகே உள்ள காட்டில் இருந்து வந்த யானை வயலில் இறங்கி நெல் மூட்டைகள் மற்றும் 7 வாழை மரங்களை சேதப்படுத்தியது.இதனை கண்ட விவசாயிகள் உடனே பங்களாமேடு வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் வன அலுவலர்கள் அங்கு உடனே வந்து கிராம மக்களுடன் இணைந்து மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் யானையை காட்டு பகுதிக்கு விரட்டினர். அப்போது வன விலங்குகளால் அடிக்கடி பயிர் சேதங்கள் ஏற்படுகிறது எனவும் அதற்கு வனத்துறை சார்பில் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டியும் அப்பகுதி விவசாயிகள் வனச்சரக அலுவலர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதிகாலையில் காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மீண்டும் காட்டுயானை கிராமத்தில் புகுந்துவிடுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்….

The post பேரணாம்பட்டில் பரபரப்பு அதிகாலையில் விவசாய நிலத்தில் புகுந்து காட்டுயானை அட்டகாசம்-மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Beranambad ,peranambattu ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...