×

பேட்டையில் மந்த கதியில் பாதாள சாக்கடை திட்ட பணி-தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

பேட்டை : பேட்டையில் மந்தகதியில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடக்கிறது. மேலும் இதற்காகத் தோண்டிய குழிகள் முறையாக மூடப்படாததால் தேங்கிநிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. நெல்லை பேட்டை நேருஜி நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறுகிய தெருக்களை கொண்ட இப்பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு ராட்சத குழிகள் தோண்டப்பட்டன. பின்னர் இவை சரிவர சமன்செய்து மூடப்படவில்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று  பரவும் அவலம் நிலவுகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனிடையே அப்பகுதி அருகே விரைவில் நடைபெற இருக்கும் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துவர ஏதுவாக தற்காலிகமாக சேதமடைந்த தெருக்களை சமன்செய்து கழிவுநீர் தேங்காத வண்ணம் சீராக செல்ல தக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்….

The post பேட்டையில் மந்த கதியில் பாதாள சாக்கடை திட்ட பணி-தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Manda Kati ,Pettaya ,Pettah ,Mantakathi ,Manda Kathi ,Dinakaran ,
× RELATED தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை