×

ஆற்றில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு-4 கடைகளுக்கு நோட்டீஸ்

தேன்கனிக்கோட்டை :  ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை பொதுசுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து, 4 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை கிராமத்தில் சனத்குமார் ஆற்றில் மாடு, கோழி ஆகியவற்றின் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் செய்ததின் பேரில், பொதுசுகாதார துறை தளி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரம், சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன், கள உதவியாளர்கள் மற்றும் தளி மண்டல துணை பிடிஓ கோதண்டன், தண்டரை ஊராட்சி ஒன்றிய தலைவர் நீலம்மா, மல்லசந்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுரேகா, ஊராட்சி செயலர் விஸ்வநாதன், மகேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், கழிவுகள் பென்னங்கூர் கிராமத்தில் கடை வைத்திருக்கும் நபர்கள் மூலம் கொட்டப்படுவதும், பொது சுகாதார துறை, ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதி பெறாமல் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, சுகாதாரமற்ற முறையில் கடையினை பராமரித்து வந்த 4 கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது….

The post ஆற்றில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு-4 கடைகளுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு